உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வெற்றிலையின் விலை பெரும் வீழ்ச்சி

வெற்றிலையின் விலை பெரும் வீழ்ச்சி

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் வெற்றிலையின் விலை பெரும் சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தென்மாவட்டங்களில் திருப்புவனம், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு வெற்றிலை பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் பல ரகங்கள் இருந்தாலும் திருப்புவனத்தில் சிறுகாமணி, கற்பூரம் உள்ளிட்டவைகள் அதிகளவு பயிரிடப்படுகிறது.திருப்புவனம் வட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை நடவு செய்துள்ளனர். நெல் பயிரிட்ட விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து ஐந்து முதல் 15 விவசாயிகள் கூட்டாக இணைந்து வெற்றிலை பயிரிடுகின்றனர். பயிரிட்டு ஆறு மாதத்திற்கு பிறகுதான் வெற்றிலை அறுவடை தொடங்கும். குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் வரை பலன் தரும். 15 நாட்களுக்கு ஒரு முறை வெற்றிலை அறுவடை செய்யப்படும். ஏக்கருக்கு 1,500 கிலோ வரை அறுவடையாகும்.கடந்த 2 மாதங்களுக்கு முன் மாதம் கிலோ 95 முதல் 160 ரூபாய் வரை விற்ற வெற்றிலை, தற்போது கிலோ 65 முதல் 120 ரூபாய்க்கு தான் விற்கிறது.கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெற்றிலையின் பயன்பாடு குறைந்ததால் விலை சரிந்துள்ளது. இனி தை பிறந்தால்தான் வெற்றிலை விலை உயரும்.திருப்புவனம் பகுதி வெற்றிலைகள் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினமும் அனுப்பி வைக்கப்படும். விலை வீழ்ச்சியால் வெற்றிலை அறுவடை குறைந்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, வியாபாரிகள் கிலோ 50 முதல் 80 ரூபாய்க்கு தான் விவசாயிகளிடம் வாங்குகின்றனர். அவர்கள் வெளிமார்க்கெட்டில் கிலோ ரூ.120க்கு விற்கின்றனர். தற்போது வெற்றிலை விற்பனை குறைந்து விட்டதால், வியாபாரிகள் வரத்தும் குறைந்து விட்டது. தை மாத பிறப்பிற்கு பின் தான் முகூர்த்த காலமாக இருப்பதால், அதிக வெற்றிலை விற்பனையாகும். அதற்கு பின் விலை உயரும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை