உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / "ஓட்டல், கல்யாண மகால் சமையல் அறை ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு

"ஓட்டல், கல்யாண மகால் சமையல் அறை ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு

சிவகங்கை:''கல்யாண மண்டபங்களில் சுகாதாரமான முறையில் சமையல் செய்யப் படுகிறதா,'' என, கண்காணிக்க கலெக்டர் ராஜாராமன் உத்தரவிட்டார்.சிவகங்கையில் தொற்று நோய் தடுப்பு திட்ட முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் தலைமை வகித்தார். துணை இயக்குனர் (சுகாதாரம்) அகல்யா முன்னிலை வகித்தார்.இணை இயக்குனர் (மருத்துவம்) ரஞ்சனி தேவி, முதன்மை கல்வி அலுவலர் செல்லம், மாவட்ட கல்வி அலுவலர் சுபாஷினி, குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் வேல்முருகன் பங்கேற்றனர். கலெக்டர் பேசுகையில், '' ஆக., 15 வரை மாவட்டத்தில் தொற்று நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடக்க உள்ளது. இதற்காக கடைகளில் விற்கப்படும் பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும். காலாவதியான தேதியில் பாக்கெட் குடிநீர் விற்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர ஓட்டல், கல்யாண மண்டப சமையல் அறைகளில் சுகாதாரமான முறையில் சமையல் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யவேண்டும். பள்ளிகளில் குடிநீர் தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். கலை நிகழ்ச்சிகள் மூலம் சுகாதாரத்தின் அவசியம் பற்றி விளக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ