உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சீரமைக்கப்படாத ரோடு களமிறங்கிய கவுன்சிலர்கள்

சீரமைக்கப்படாத ரோடு களமிறங்கிய கவுன்சிலர்கள்

திருப்புவனம் : திருப்புவனத்தில் சீரமைக்கப்படாமல் மேடு பள்ளமாக இருந்த ரோட்டை கவுன்சிலர்கள் சொந்த செலவில் சீரமைத்தனர்.திருப்புவனம் போலீஸ் லயன் தெரு துவங்கி தேரடிவீதி வரையுள்ள சாலை பராமரிப்பு இல்லாததால் குண்டும் குழியுமாக உள்ளது.த.மா.கா., தலைவர் வாசனின் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 40 லட்ச ரூபாய் நிநி ஒதுக்கியும் பணி தொடங்கப்படவில்லை. சிலர் நீதிமன்றத்தில் குழாய் பதிக்கும் பணி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஆகியவை இருப்பதாக கூறி தடையாணை பெற்றதால், எந்த வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.திருவிழா நடக்க உள்ள நிலையில் த.மா.கா., கவுன்சிலர்கள் பாரத்ராஜா,வெங்கடேஸ்வரி ஆகியோர் சொந்த பணத்தில் மண்ணை கொட்டி இயந்திரம் மூலம் சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை