| ADDED : டிச 26, 2025 05:28 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் குடியிருப்புகளுக்கு மத்தியில், இறந்த மாடுகளின் எலும்புகள், கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பேரூராட்சியில் சிறுவர்பூங்கா அருகே உள்ள மாணிக்கம் தெரு பகுதியில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். நகரில் இறந்த, வயதான மாடுகளை அவற்றின் தோல்களை எடுப்பதற்காக இப்பகுதியில் வைத்து அறுத்து, எலும்புகள், கழிவுகளை குடியிருப்பு நடுவே கொட்டுகின்றனர். இதனால் கழிவுகளின் துர்நாற்றம் பல மீட்டர் தூரத்திற்கு பரவி கடும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அப்பகுதியில் ஓடும் கழிவு நீர் கால்வாயிலும் இக்கழிவுகள் கலந்து விடுகிறது. இது பற்றி சுற்றுவட்டார மக்கள் பல முறைப்புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாட்டுக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.