உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மானாமதுரையில் தெரு விளக்கு இல்லாததால் குற்றங்கள் அதிகரிப்பு

 மானாமதுரையில் தெரு விளக்கு இல்லாததால் குற்றங்கள் அதிகரிப்பு

மானாமதுரை: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட செட்டிகுளம் காளீஸ்வரி நகர் பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டில் உள்ள செட்டிகுளம் பகுதியில் இருந்து காளீஸ்வரி நகர் வழியாக தாயமங்கலம் செல்லும் ரோட்டில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக தெருவிளக்குகள் இல்லாததால் இருட்டாக இருப்பதால் இப்பகுதியில் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.4 நாட்களுக்கு முன்பு கூட அலங்கார் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்ற வாலிபரை இப்பகுதியில் வெட்டி கொலை செய்தனர். இப்பகுதியில் கூட்டமாக அமர்ந்து மது அருந்துபவர்களால் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. போலீசார் இந்த பகுதியில் ரோந்து சென்று குற்றங்களை தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை