உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பழுதான ரோந்து வாகனம்; தவிக்கும் போலீசார்

பழுதான ரோந்து வாகனம்; தவிக்கும் போலீசார்

திருப்புவனம் : நான்கு வழிச்சாலை பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்ட நெடுஞ்சாலை ரோந்து வாகனம் ஒரு மாதத்திற்கு முன் பழுதான நிலையில் இன்று வரை சரி செய்யப்படாததால் போலீசார் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர். மதுரை/ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையாக இருந்த போது நெடுஞ்சாலை ரோந்து பணிக்கு கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது ரோந்து வாகனம் வழங்கப்பட்டது. அதிநவீன கார், ஒரு எஸ்.ஐ., தலைமையில் ஐந்து போலீசார், ப்ரீத் அனலைசர், ஸ்பீடு கன், கயிறு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. மானா மதுரைக்கு வழங்கப்பட்ட வாகனம் விபத்தில் சிக்கி உருக்குலைந்தது. மாற்று வாகனம் வழங்கப்பட்டு அதுவும் அடிக்கடி பழுதாகி வந்தது.இதனையடுத்து புது வாகனம் வழங்கப்பட்டது. அதுவும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பழுதான நிலையில் இன்று வரை வாகனம் சரி செய்யப்படவே இல்லை. இதனால் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தினசரி ஒரு வாகனத்தில் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்புவனம் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் ரோந்து போலீசாருக்கு உரிய வாகனம் இல்லாததால் பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தை உடனடியாக சரி செய்து வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ