உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் பூங்கா அருகில் டிரான்ஸ்பார்மர் மீது மரம் விழும் அபாயம்

மானாமதுரையில் பூங்கா அருகில் டிரான்ஸ்பார்மர் மீது மரம் விழும் அபாயம்

மானாமதுரை : மானாமதுரையில் காந்தி சிலை பின்புறம் நுாலகத்திற்கு அருகில் உள்ள குழந்தைகள் பூங்காவில் டிரான்ஸ்பார்மருக்கு அருகில் பட்டுப்போன மரம் எப்போது விழுமோ என்ற நிலை உள்ளது.மானாமதுரை கீழ்கரையில் காந்தி சிலை பின்புறம் நுாலகத்திற்கு அருகில் குழந்தைகள் பூங்கா செயல்பட்டு வருகிறது. இப்பூங்காவிற்கு அருகில் கைப்பந்து மைதானம், நுாலகம், எம். எல்.ஏ., அலுவலகம் என மக்கள் வந்து செல்லக்கூடிய இடங்கள் உள்ளன. பூங்காவில் உள்ள டிரான்ஸ்பார்மருக்கு அருகில் ஒரு பட்டுப்போன வேப்பமரம் நீண்ட மாதங்களாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் விளையாடி வருகிற நிலையில் இப்பகுதியில் மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பட்டுப்போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை