| ADDED : ஜன 08, 2024 06:17 AM
திருப்புத்தூர் : திருப்புத்துாரில் உள்ள கோட்டை கருப்பண்ண சுவாமி கோயிலில் பிப்., 21 ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. பாண்டிய மன்னர்கள் கால கோட்டையின் பிரதான வாசல் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டு புராதன கோட்டைச்சுவர் கோயில் ராஜகோபுரத்துடன் உள்ளது. தற்போது இக்கோயிலுக்கு திருப்பணிகள் நடந்து வருகிறது. கோயிலிலுள்ள அனைத்து விமானங்களும், கோபுரமும் புதிதாக சுதை சிற்ப வேலைப்பாடுகள், துத்தநாக கம்பிகளுடன் புனரமைக்கப்படுகிறது. கல்துாண்கள், கூரைகள் பெயிண்ட் நீக்கப்பட்டு சுத்தம் செய்கின்றனர். அம்பாள், தொண்டைமான் சன்னதிக்கு புதிய விமானம் அமைக்கின்றனர்.இக்கோயில் கும்பாபிேஷகத்திற்கான ஆலோசனை கூட்டம் அறங்காவலர் எஸ்.வைரவன் தலைமையில் நடந்தது.பிப்.18 அன்று கணபதிஹோமத்துடன் யாகசாலை பூர்வாங்க பூஜைகள் துவங்குகிறது. பிப்.19 காலையில் இரண்டாம் யாகசாலை, மாலையில் மூன்றாம் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. பிப்.,20 காலையில் நான்காம், மாலையில் ஐந்தாம் யாகசாலை பூஜைகள் நடைபெறும். பிப்.21 காலை6:00 மணிக்கு ஆறாம் காலயாகசாலை பூஜை, காலை 9:00 மணிமுதல் 10:00 மணிக்குள் கும்பாபிேஷகம் நடைபெறும். சிவாச்சாரியார் பி.நமச்சிவாயம் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெறும்.