உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அனைத்து துறை சங்கங்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

 அனைத்து துறை சங்கங்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு அலுவலர் ஒன்றிய முன்னாள் மாநில தலைவர் துரைப்பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரமேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் கலைமணி வரவேற்றார். வேளாண்மை துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சந்தனக்குமார், தமிழ்நாடு கல்வித்துறை பணியாளர் சங்க மாநில செயலாளர் பாண்டி, செவிலியர் சங்க மாவட்ட தலைவர் சாந்தி, தமிழ்நாடு கல்வித்துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலமுறை சம்பளம் பெறும் அனைவருக்கும் நிரந்தர காலமுறை சம்பளம் வழங்க வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை