உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

சிவகங்கை : சோழபுரம் சு.பா.தே.வி., பள்ளியில் படத்திறப்பு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடந்தது. நல்லாசிரியர் பகீரதநாச்சியப்பன் தலைமை வகித்தார். சுத்தானந்த யோக சமாஜ தலைவர் வேங்கடகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி செயலாளர் வேங்கடாசலபதி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன், ஊரக வளர்ச்சித்துறை முன்னாள் கூடுதல் இயக்குனர் துரைராஜ், சமாஜ செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் பில்லப்பன், சீனிவாசன், விஜேந்திராவின் படங்களை திறந்தனர். முன்னாள் எம்.பி., உடையப்பன், பேராசிரியை கஸ்தூரிபா பங்கேற்றனர். மாணவர்களுக்கு இடையமேலூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜியோனி தலைமையில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் வேங்கடராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ