உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அண்ணாமலை நகரில் எரிக்கப்படும் குப்பை

அண்ணாமலை நகரில் எரிக்கப்படும் குப்பை

மானாமதுரை: மானாமதுரையில் குடியிருப்பு பகுதிகளில் குப்பையை எரிப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரையில் சாஸ்தா நகர், அண்ணாமலை நகர், அன்பு நகர், ராம் நகர் உள்ளிட்ட பகுதியில் செல்லும் சுப்பன் கால்வாய் பகுதியை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் குப்பைசேகரிக்கும் துாய்மை பணியாளர்கள் அதனை முறையாக குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லாமல் ஆங்காங்கே கால்வாயில் போட்டு எரிப்பதினால் ஏற்படும் புகை மூட்டத்தால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு மூச்சுதிணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்ற நிலையில் நகராட்சி அதிகாரிகள் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை