உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உலக ஈர நில பாதுகாப்பு விழிப்புணர்வு

உலக ஈர நில பாதுகாப்பு விழிப்புணர்வு

சிவகங்கை : தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் மூலம் சிவகங்கை மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் கொல்லங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி, புனித ஜஸ்டின் பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் உலக ஈர நில பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கொல்லங்குடி பள்ளி தலைமையாசிரியர் விமலி வின்சென்ட் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.சிவகங்கை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிவமணி மற்றும் புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜோனா முன்னிலை வகித்தனர்.சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ், மதுரை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல், சிவகங்கை மாவட்ட பசுமை படை அபிநயா பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்