உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  திறனறித் தேர்வில் அசத்தும் அரசுப்பள்ளி

 திறனறித் தேர்வில் அசத்தும் அரசுப்பள்ளி

சிங்கம்புணரி: எஸ்.புதுார் ஒன்றியம் கட்டுக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில் சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் தமிழ் இலக்கிய திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ரூபாய் 1500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை தரப்படும். 2025- -26 ஆம் ஆண்டுக்கான தேர்வு கடந்த அக். 11ல் நடந்தது. 2.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் டிச. 1 ல் வெளியானது. இதில் எஸ்.புதூர் ஒன்றியம் கட்டுக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 4 மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இப்பள்ளி சார்பில் 20௨3--24 ல் 6 பேரும், 2024--25ல் 5 பேரும் வெற்றி பெற்ற நிலையில், இந்தாண்டும் 3வது முறையாக இப்பள்ளி சாதனை படைத்துள்ளது. வெற்றி பெற்ற மாணவிகள் அ.கனிதா (94 மதிப்பெண்), சு.ரூபிணி (92), ஆ.கோமதி (91), ப.அனுஷ்கா (91) மற்றும் பயிற்றுவித்த பள்ளி முதுகலை தமிழாசிரியை பூர்ணிமா காந்தன் ஆகியோரை தலைமை ஆசிரியர் சிபி சக்கரவர்த்தி, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி