உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வீடுதேடி ரேஷன் பொருள் வினியோகம் டிச. 2 மற்றும் 3ல் தரப்படும்

 வீடுதேடி ரேஷன் பொருள் வினியோகம் டிச. 2 மற்றும் 3ல் தரப்படும்

சிவகங்கை: மாவட்ட அளவில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் 41,183 குடும்பங்களுக்கு டிச., மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் டிச., 2 மற்றும் 3 ம் தேதி வீடு தேடி வந்து வழங்கப்படும் என கூட்டுறவு இணைபதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார். அவர் கூறியதாவது, மாவட்ட அளவில் 65 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாவட்டத்தில் 41,183 குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதில் பயன்பெறுகின்றனர். இவர்களுக்கு டிச., மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் டிச., 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வீட்டிற்கே வந்துவழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ