உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கட்டிக்குளம் கோயிலில் இன்று சிலை பிரதிஷ்டை

கட்டிக்குளம் கோயிலில் இன்று சிலை பிரதிஷ்டை

மானாமதுரை: மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில்கருப்பனேந்தல் மடத்தில் உள்ள சித்தர்சூட்டுக் கோல் மாயாண்டி சுவாமி ஜீவ ஒடுக்கம் உள்ளது. இங்கு தினந்தோறும் அன்னதானம் மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை, ஆடியில் அவதார திருவிழா நடைபெறும். இந்நிலையில் பக்தர்கள் சார்பில் புதிதாக ஐம்பொன்னாலான மாயாண்டி சுவாமி சிலையும், மயில்வாகனமும் செய்யப்பட்டுள்ளது.இதனை பிரதிஷ்டை செய்யும் விழா இன்று கருப்பனேந்தல் மடத்தில் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டு புதிய வாகனத்தில் வீதி உலா நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்