| ADDED : பிப் 17, 2024 04:59 AM
இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில்பல்வேறு வசதிகளை ஏற்படுத்த பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜமுதீன் தலைமையில் நடந்தது துணைத்தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார் செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்றார். தலைமை அலுவலர் முருகன் தீர்மானங்களை வாசித்தார்.கூட்டத்தில் இளையான்குடி, சிவகங்கை சாலையில் பேரூராட்சிக்குட்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி முடிவு பெற்று திறப்பு விழாவிற்காக முதல்வரின் தேதி கேட்டு ஒப்புதல் அனுப்பப்பட்டுள்ளது.புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பயணிகள் அமர இருக்கை வசதி செய்தல், புதிய மின் இணைப்பு பெறுதல், பஸ் ஸ்டாண்ட் முன்புறம் மற்றும் வலது இடது புறங்களில் மரக்கன்றுகளை நடுதல், பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் பேருந்து நிலைய பெயர் பலகை மற்றும் ஆர்ச் அமைத்தல், பஸ் ஸ்டாண்டில் உட்புறம் நீரூற்றுடன் கூடிய பூங்கா அமைத்தல், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை சுற்றி எல்.இ.டி., விளக்குகள் அமைத்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.