உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  முழுமைபெறாத பாலாறு துார்வாரும் பணி

 முழுமைபெறாத பாலாறு துார்வாரும் பணி

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதியில் பாலாறு துார்வாரும் பணி முழுமைபெறாததால், பணிகளை விரைந்து முடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் உருவாகும் பாலாறும், உப்பாறும் சிங்கம்புணரியில் ஒன்றாக கலந்து திருப்புத்துார் வரை பாலாறு என்ற பெயரில் செல்கிறது. அங்கிருந்து விருசுழியாறு என்ற பெயரில் தொண்டி அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆறுகள் ஆக் கிரமிப்பு மற்றும் சீமைக்கருவேல மரங்களால் மறைந்து வந்தது. இது குறித்து தினமலரில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் தனியார் பங் களிப்புடன் ஆறுகளை தூர்வார அப்போதைய கலெக்டர் ஆஷா அஜித் முயற்சி மேற்கொண்டார். இதனை தொடர்ந்து 26 கி.மீ., நீள பாலாறும், 2.5 கி.மீ., நீள உப்பாற்றையும் சீரமைக்கும் பணி துவங்கி யது. சிங்கம்புணரி, காளாப்பூர், முறையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆறு துார்வாரப்பட்ட நிலையில் சில இடங்களில் இன்னும் பணிகள் முழுமை பெறவில்லை. மேலும் இரு கரை யிலும் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. எனவே விரைந்து பணிகளை முடிக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்