உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டுபட்டி மஞ்சுவிரட்டு : ஒருவர் பலி * 75 பேர் காயம்

கண்டுபட்டி மஞ்சுவிரட்டு : ஒருவர் பலி * 75 பேர் காயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் திறந்த வெளி பொட்டலில் 550 காளைகள் வரை அவிழ்த்து விடப்பட்டன. இதில், மாடுபிடி வீரர்கள் 75 பேர் காயமுற்றனர். இவர்களில் காரைக்குடி போலீசார் உடையனசாமி 50, உட்பட 25 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாகனேரி அருகே கோவினிபட்டியை சேர்ந்த பூமிநாதன் 56, என்பவர் அவரது காளையை நேற்று மதியம் 12:00 மணிக்கு ஊத்திக்குளம் பொட்டலில் அவிழ்த்துவிட்டுள்ளார். அவரது காளையே அவரது கழுத்தில் குத்தியதில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி