உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நேருக்கு நேர் சந்தித்து வாழ்த்துக்கூறிய காங்., - அதிமுக வேட்பாளர்கள்

நேருக்கு நேர் சந்தித்து வாழ்த்துக்கூறிய காங்., - அதிமுக வேட்பாளர்கள்

காரைக்குடி: இஸ்லாமியர்களிடம் ஓட்டு சேகரித்த காங்., வேட்பாளர் கார்த்தி அதிமுக., வேட்பாளர் சேவியர் தாஸ் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து, ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.காரைக்குடி ஈதுகா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமியர்களிடம் காங்., வேட்பாளர் கார்த்தி, அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் நோட்டீஸ் வழங்கி ஓட்டு சேகரித்தனர். அப்போது, காங்., வேட்பாளர் கார்த்தி, அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் நலம் விசாரித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். ஓட்டு சேகரிக்கும் போதும், பிரசாரங்களில் ஈடுபடும் போதும் ஒருவருக்கொருவர் மாறி மாறி குறைகளை தெரிவித்தாலும் நேரில் சந்திக்கும்போது கைகுலுக்கி வாழ்த்து சொல்லுவது நாகரிக அரசியலின் வெளிப்பாடாக அமைந்துள்ளது என பலரும் விமர்சனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை