மேலும் செய்திகள்
விரைவு தபால் கட்டணம் உயர்வு
23 hour(s) ago
சிவகங்கையில் கஞ்சா கடத்தல் காருடன் அண்ணன், தம்பி கைது
23 hour(s) ago
குயிலி நினைவு தினம் அனுசரிப்பு
02-Oct-2025
இளம் செஞ்சிலுவை சங்க கூட்டம்
02-Oct-2025
மானாமதுரை : மானாமதுரையில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் ரயில்வே கேட் ரோடு பெயர்ந்து ஆங்காங்கே பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குஉள்ளாகி வருகின்றனர்.மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரயில்வே கேட்டை தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்தை மூடாததால் இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டதை தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தினர் அப்பகுதியில் தார் ரோடு அமைத்தனர்.கடந்த 2 நாட்களாக மானாமதுரையில் பெய்த தொடர் மழை காரணமாக அப்பகுதி ரோடு பெயர்ந்து பள்ளமாக காட்சியளிப்பதினால் வாகன ஓட்டிகள்அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரயில்வே நிர்வாகத்தினர் உடனடியாக ரயில்வே கேட் பகுதியில் உள்ள ரோட்டை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
23 hour(s) ago
23 hour(s) ago
02-Oct-2025
02-Oct-2025