உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சருகணியில் நாளை மருத்துவ முகாம் 

 சருகணியில் நாளை மருத்துவ முகாம் 

சிவகங்கை: தேவகோட்டை அருகே சருகணி இதயா மகளிர் கல்லுாரியில் நாளை (நவ.,22) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெற உள்ள முகாமில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உட்பட பல்வேறு மருத்துவ பரிசோதனை வழங்கப் படும். இது தவிர கண், காது மூக்கு தொண்டை, பல், எலும்பு, நரம்பியல், மனநலம், சர்க்கரை, நுரையீரல், இருதய நோய், குழந்தைகள், தோல், சித்த மருத்துவம் உட்பட 17 விதமான சிகிச்சை வழங்கப்படும். டாக்டர்கள் பரிந்துரைப்படி எக்ஸ்ரே, ஸ்கேன், கர்ப்பை, மார்பக புற்றுநோய் பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு சிறப்பு பரிசோதனை, தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம், முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை, மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்றுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை