உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை வசதி இல்லை; அடிப்படை தேவைக்கு பிற மாவட்டத்திற்கு செல்லும் நிலை

பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை வசதி இல்லை; அடிப்படை தேவைக்கு பிற மாவட்டத்திற்கு செல்லும் நிலை

நெற்குப்பை : நெற்குப்பை பேரூராட்சியில் சார்பதிவாளர் அலுவலகம், பஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை வசதி ஏற்படுத்த நீண்ட காலமாக பொதுமக்கள் கோரியுள்ளனர்.திருப்புத்துார் ஒன்றியத்தில் உள்ளது நெற்குப்பை பேரூராட்சி. திருப்புத்துாரிலிருந்து பொன்னமராவதி செல்லும் ரோட்டில் உள்ளது. இந்த பேரூராட்சியில் பரியாமருதிப்பட்டி,வடுகபட்டி,கிளாமடம்,புரந்தன்பட்டி,நீலமேகப்பட்டி,பள்ளத்துப்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. 1944 ல் பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டாலும் போதிய வருவாய் இன்றி பெரிய முன்னேற்றம் காணாத நிலையே உள்ளது. குடிநீர் தேவை காவிரிக்குடிநீர் திட்டத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மற்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.இப்பகுதி மக்கள் பஸ் ஸ்டாண்ட், சார்பதிவாளர் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் கோரி வருகின்றனர். நெற்குப்பை மற்றும் சுற்றுப்புற 30 கிராம மக்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு பத்திரப்பதிவு, திருமண பதிவு,பிறந்தநாள்,இறந்தநாள் சான்றிதழ் சம்பந்தமாக செல்ல வேண்டியுள்ளது. இந்தப் பணிக்கு ஒரு நாள் செலவாவதுடன், பொருட்விரயமும் ஆவதாக கூறுகின்றனர். இதனால் நெற்குப்பையில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் துவக்கக் கோரியுள்ளனர். அது போல முக்கியமான சாலையில் இருந்தாலும் பஸ் ஸ்டாண்ட் வசதி இல்லை. மேலும் பராமரிக்கப்படாத ஊரணியில் படித்துறை அமைத்து மேம்படுத்தவும் கோரியுள்ளனர்.தற்போது இயங்கி வரும் ஆரம்பசுகாதார நிலையத்தில் போதிய படுக்கை வசதி இல்லை. இதனால் பெரிய சிகிச்சைக்கு பக்கத்து மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி அல்லது 20 கி.மீ. தொலைவிலுள்ள திருப்புத்துாருக்கு செல்ல வேண்டியுள்ளது. பக்கத்து மாவட்டத்திற்கு செல்வது நிர்வாக ரீதியாக சிரமத்தை தருகிறது. இதனால் சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தவும் கோரியுள்ளனர்.இந்நிலையில் தற்போது அரசு தரப்பில் பேரூராட்சியைத் தரம் .உயர்த்த திட்டமிட்டு கூடுதல் பகுதிகள் சேர்க்க கோரியுள்ளது. அதற்காக நெற்குப்பைக்கு அருகில் உள்ள ஊராட்சிகளான கொன்னத்தான்பட்டி,ஒழுகமங்கலம்,துவார் ஆகியவற்றை பேரூராட்சி குறிப்பிடப்பட்டுள்ளது.பேரூராட்சி தலைவர் பழனியப்பன் கூறுகையில், நெற்குப்பையில் கூடுதல் பகுதிகளை இணைக்க ஆலோசனை நடைபெறுகிறது. தரம் உயர்த்தினால் கூடுதல் நிதி வசதிக்கு வாய்ப்புள்ளது. அப்போது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்படும். அரசு மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகம் குறித்து அரசிடம் கோரியுள்ளோம்' என்றார்.நெற்குப்பை பேரூராட்சி தற்போது கிராமங்களின் தொகுப்பாக உள்ளது. இத்துடன் தேவையான கிராமப் பகுதிகளை இணைத்து முழுமையான வசதிகளுடன் கூடிய நகராக மாற்ற வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் நெற்குப்பை மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களும் பலனடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை