உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருட்டு வழக்கில் ஒருவர் கைது

திருட்டு வழக்கில் ஒருவர் கைது

சிவகங்கை, : காளையார்கோவில் பகுதியில் டிச.3ம் தேதி பள்ளிதம்பம் புனித மூவரசர் தேவாலயம், ஜன.7ம் தேதி காட்டூர் ஆரோக்கிய மாதா ஆலயம், ஜன.9ம் தேதி கீழச்சேத்துார் புனித லயோலா இன்னாசியார் ஆலயம் என தொடர்ந்து உண்டியல்களை உடைத்து திருட்டு நடந்தது. சிவகங்கை எஸ்.பி., அர்விந்த், எஸ்.ஐ., சரவணக்குமார், குகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடினர். சர்ச்களில் இருந்த சி.சி.டி.வி., ஆதாரத்தின் அடிப்படையில் விசாரித்ததில் சிவகங்கை மாவட்டம் கோமாளிப்பட்டியை சேர்ந்த சுரேஷ் 37 என்பவரை தனிப்படையினர் கைது செய்து அவரிடம் உண்டியலில் திருடப்பட்ட 10.26 கிராம் தாலி மற்றும் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட டூவீலரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி