உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளியில் நுாலகம் திறப்பு

பள்ளியில் நுாலகம் திறப்பு

காரைக்குடி : காரைக்குடி மு.வி., அரசு மேல்நிலைப்பள்ளி, முத்துப்பட்டினம், ஒ.சிறுவயல், கோட்டையூர் அரசு பள்ளிகளில் எம்.பி., மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நுாலகங்களை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., திறந்து வைத்து பேசினார்.அதில் அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுகிறது. அங்கு பயில்வதை கம்பீரமாக சொல்ல வேண்டும். நுாலகத்தில் தான் வாழ்க்கை கல்வியை கற்றுக்கொள்ள முடியும். மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். என்றார். இதில், மாங்குடி எம்.எல்.ஏ., நகரத் தலைவர் பாண்டி மெய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் , கவுன்சிலர்கள், தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ