உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் மாங்குளம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

மானாமதுரையில் மாங்குளம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

மானாமதுரை, : மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாங்குளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜன் தலைமையில் நடந்தது. செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் மானாமதுரை நகராட்சியோடு மாங்குளம் ஊராட்சி பகுதிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாங்குளம் கிராம மக்கள் கூறுகையில், மாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கினால் அப்பகுதியில் உள்ள மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை நகராட்சியோடு இணைத்தால் 100 நாள் வேலை மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு உள்ளது,மேலும் கிராம பகுதியில் எங்களுக்கு ஊராட்சி சார்பில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிற நிலையில் நகராட்சியோடு கிராம பகுதிகளை இணைத்தால் எங்களுக்கு மேலும் கூடுதல் செலவாகும் வாய்ப்பு உள்ளதால் நகராட்சியோடு இணைப்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை