உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பகுதி நேர வேலை: இளைஞரிடம் மோசடி

 பகுதி நேர வேலை: இளைஞரிடம் மோசடி

சிவகங்கை: இளையான்குடி அருகே இளைஞரிடம் பகுதி நேர வேலை தருவதாக கூறி ஆன்லைனில் ரூ.1.74 லட்சம் மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 32 வயது இளைஞர். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு பகுதி நேர வேலை தருவதாக குறுஞ்செய்தி வந்தது. அந்த குறுஞ்செய்தியில் உள்ள எண்ணை அந்த இளைஞர் தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர் டெலிகிராம் ஐடியில் டாஸ்க் அனுப்பி அதில் பணம் செலுத்தி டாஸ்க்கை முடித்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அந்த இளைஞரை நம்ப வைத்தார். இளைஞரும் அவர் கூறிய வங்கி கணக்கில் 19 தவணைகளில் ரூ.ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 950 செலுத்தினார். பணத்தை பெற்ற அந்த நபர் அவருக்கு பகுதி நேர வேலை கொடுக்காமலும் டாஸ்க் ஜெயித்த பணத்தை கொடுக்காமலும் ஏமாற்றினார். அந்த இளைஞர் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர். ரூ.23 ஆயிரம் ஏமாந்த பெண் சிவகங்கை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 32 வயது பெண். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு கேரள லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. இதை நம்பிய அந்த பெண் அதில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர் ரூ.23 ஆயிரம் செலுத்தினால் பரிசுத்தொகை அனுப்புவதாக கூறியுள்ளார். அதை நம்பிய அந்த பெண் ரூ.23 ஆயிரம் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் பரிசுத்தொகை கொடுக்கவில்லை. அந்த பெண் சிவகங்கை சைபர் கிரைமில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ