உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் அடிக்கடி மின்வெட்டால் மக்கள் தவிப்பு

 திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் அடிக்கடி மின்வெட்டால் மக்கள் தவிப்பு

திருப்புவனம்: திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் நேற்றுமுன்தினம் பலமுறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமத்திற் குள்ளாகினர். மாநிலம் முழுவதும் சம்பா பருவ சாகுபடி பணி தாமதமாக தொடங்கியுள்ளன. விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கு காப்பீடு செய்ய இணைய தள மையங்களுக்கு வருகின்றனர். கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள் உள்ளிட்டவற்றிற்கு மின்சாரம் மிகவும் அவசியம், இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் வசதி இருந்தாலும் பிரிண்டரை மின்சாரம் இருந்தால் தான் பயன்படுத்த முடியும்,மருத்துவமனை, வங்கிகளில் மின்சாரம் இருந்தால் தான் பணிகளை மேற்கொள்ள முடியும், திருப்புவனத்தில் நேற்றுமன்தினம் பல முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு நீண்ட நேரம் கழித்து மீண்டும் வழங்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்: திருப்புவனத்தில் எந்த பணியும் மின்சாரத்தை துண்டித்து விட்டு மேற்கொள்ளப்படவில்லை. மதுரை டவரில் இருந்தே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், திருப்புவனத்திலும் துண்டிக்கப்பட்டது, என்றனர். திருப்பாச்சேத்தியில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக மின்சாரம் பலமுறை துண்டிக்கப்பட்டதால் இரவில் நிம்மதியாக துாங்க கூட முடியவில்லை என மக்கள் புலம்புகின்றனர். ஒவ்வொரு முறையும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மூன்று முதல் நான்கு மணி நேரம் கழித்தே மின்சாரம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் தரப்பில் கூறுகையில்: திருப்புவனத்தில் இருந்து வயல் வழியாக திருப்பாச்சேத்திக்கு மின்வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது .மழை காரணமாகவும், காற்று காரணமாகவும் அடிக்கடி மின்கம்பி உரசி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. 2017ல் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட போதே நான்கு வழிச்சாலையை ஒட்டி மின் வழித்தடத்தை அமைத்திருந்தால் பிரச்னை இருந்திருக்காது. பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை