உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்களுடன் முதல்வர் திட்ட சர்வர் பழுது

மக்களுடன் முதல்வர் திட்ட சர்வர் பழுது

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட சர்வர் பழுதானதால் முகாமிற்கு வந்த மக்கள் சிரமப்பட்டனர். தமிழக அரசால் 'மக்களின் முதல்வர்' என்று புதிய திட்டம் கடந்தாண்டு நவ. 22 முதல் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அலுவலர்கள் மனுக்கள் பெறுகின்றனர். 18 வார்டுகளை கொண்ட சிங்கம்புணரியில் நேற்று இம்முகாம் 2 இடங்களில் நடைபெற்றது.மக்கள் பிரதிநிதிகள் காலை 10:00 மணிக்கு முகாமை துவக்கி வைத்தனர். டோக்கன் தரப்பட்டு மனுக்கள் திட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் சில நிமிடங்களில் திட்ட இணையதளத்தின் சர்வர் பழுதானதால் அடுத்தடுத்து மனுக்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. அனைத்து துறை அலுவலர்களும் மனுக்களை பெற முடியாமல் அமர்ந்திருந்தனர். இதனால் மனு அளிக்க வந்தவர்கள் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர். பலர் மனு கொடுக்காமலே திரும்பிச் சென்றனர். இதனால் டோக்கன் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.மதியத்திற்கு மேல் சர்வர் சரியான நிலையில் காத்திருந்தவர்களின் மனுக்கள் இரவு வரை பதிவேற்றம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ