உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மருந்தாளுநர் சங்க ஆர்ப்பாட்டம் 

மருந்தாளுநர் சங்க ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட தலைவர் செல்வம் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட அமைப்பு செயலாளர் ஹனிபா, மருந்தாளுநர் கனியமுதன், தமிழ்நாடு சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்தையா, இணை செயலாளர் சின்னப்பன் பங்கேற்றனர்.அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன் வாழ்த்துரை வழங்கினார். மருந்தாளுநர் சங்க மாநில செயலாளர் பாஸ்கரன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட இணை செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.காலியாகவுள்ள 1400 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 385 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை