உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலருக்கு கூடுதல் கட்டணம் நடவடிக்கை எடுக்க திட்டம்

டூவீலருக்கு கூடுதல் கட்டணம் நடவடிக்கை எடுக்க திட்டம்

மானாமதுரை: மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள டூவீலர் ஸ்டாண்டில் வெளியூர் செல்பவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.தினந்தோறும் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் மானாமதுரை நகராட்சி சார்பில் ஒரு இரு சக்கர வாகனத்திற்கு நாள் ஒன்றுக்கு ( 24 மணி நேரம்)ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குத்தகைக்கு எடுத்தவர்கள் 12 மணி நேரத்திற்கு ரூபாய் 10 வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒருவர்தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க போகும் போது 12 மணி நேரத்திற்கு மட்டும் தான் ரூ.10 எனவும், அதற்கு மேல் சென்றால் ரூ.20 எனவும் கூறி அவரிடம் வசூல் செய்பவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.இதுகுறித்து மானாமதுரை நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி கூறுகையில், மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள டூவீலர் ஸ்டாண்டில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து அங்கு விசாரணை நடத்தியதில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததை தொடர்ந்து அவர்களுக்கு நோட்டீஸ்வழங்க உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை