உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  திருப்புவனத்தில் பிளாஸ்டிக் பை பறிமுதல்

 திருப்புவனத்தில் பிளாஸ்டிக் பை பறிமுதல்

திருப்புவனம்: திருப்புவனத்தில் பேரூராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். திருப்புவனத்தில் டீக்கடை, ஓட்டல், மளிகை கடை, பூ கடை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தடையை மீறி கேரி பை பயன்படுத்தப்படுகின்றன. டீக்கடைகளில் கேரி பையில் டீ ஊற்றி பார்சல் தருகின்றனர். இவற்றை அழிக்க முடியாமல் துாய்மை பணியாளர்கள் திணறுகின்றனர். சில ஓட்டல்களில் வாழை இலைகளுக்கு பதில் பிளாஸ்டிக் பேப்பர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து நேற்று செயல் அலுவலர் கவிதா, துப்புரவு ஆய்வாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கடைகளில் சோதனை நடத்தில் 51 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை