உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  புதுச்சேரி -- கொச்சின் சைக்கிள் பயணம்

 புதுச்சேரி -- கொச்சின் சைக்கிள் பயணம்

திருப்புத்துார்: இங்கிலாந்து, ஆப்பிரிக்க பெண்கள் சைக்கிள் பயணமாக புதுச்சேரியிலிருந்து கொச்சி செல்லும் வழியில் திருப்புத்துார் வந்தனர். நேற்று காலை திருப்புத்துார் மதுரை ரோட்டில் வெளிநாட்டு பெண்கள் 10 பேர் சைக்கிளில் பயணம் வந்தனர். இங்கிலாந்து,ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த 10 பெண்களுடன் வழிகாட்டியாக கேரளாவைச் சேர்ந்த 4 பேர் இந்த குழுவில் உள்ளனர். விடுமுறை நாள் பயணமாக வந்துள்ள இவர்களுக்கு குழுத்தலைவராக அபிலாஷ் உள்ளார். அவர்களது நாட்டில் தொழில் ரீதியான சைக்கிள் ஓட்டுநர்கள் என்பதால் விடுமுறை சுற்றுலாவாக சைக்கிள் பயணத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். தற்போதைய பயணக்குழுவின் சராசரி வயது 60 ஆக உள்ளது. நவ.29 ல் புதுச்சேரியில் துவங்கி சிதம்பரம், தஞ்சாவூர், காரைக்குடி வழியாக ஒவ்வொரு நாளும் தங்கியிருந்து நேற்று காலை திருப்புத்துார் வந்துள்ளனர். நேற்று மதுரைக்கு சென்று அங்கு தங்கிய பின்னர் தொடர்ந்து, தேக்கடி, குமரகம் வழியாக டிச.12ல் கொச்சி செல்ல திட்டமிட்டுள்ளனர். குழுவிலுள்ள பாத்திமா, அனிஷா பேசுகையில், எங்கள் தாத்தா,பாட்டி குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்திய பயணத்தில் ஆர்வம் காட்டியதாகவும் சைக்கிளில் வருவதால் சாதாரண மக்களை எளிதாக சந்திக்க முடிகிறது. அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளை தெரிந்து கொள்ள முடிகிறது. மக்களின் விருந்தோம்பலும் எங்களை உற்சாகப்படுத்துகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ