| ADDED : பிப் 17, 2024 11:02 PM
சிவகங்கை: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சகாய தைனேஷ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, சிங்கராயர், குமரேசன், மாவட்ட துணை தலைவர்கள் ஜீவா ஆனந்தி, அமலசேவியர், சேவியர் சத்தியநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் கஸ்துாரி, பஞ்சுராஜ், முத்துக்குமார், கல்வி மாவட்ட தலைவர்கள் ஜான் கென்னடி, ஜோசப், கல்வி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் சென்னையில் பிப்.19 அன்று நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.