உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செய்முறைத் தேர்வுநாளை துவக்கம்

செய்முறைத் தேர்வுநாளை துவக்கம்

சிவகங்கை, - தமிழகத்தில் நடைபெறவிருக்கும் மார்ச்/ஏப்.2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நாளை முதல் பிப்.29 வரை நடக்கவுள்ளது.அறிவியல் பாடத்தில் கருத்தியல் தேர்விற்கு 75 மதிப்பெண்களும் செய்முறைத் தேர்விற்கு 25 மதிப்பெண்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு 2 மணி நேரம் நடத்தப்படும்.காலை 9:00 முதல் 11:00 மணி வரையும், மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை இரு வேளையில் நடத்தப்படும். பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சிக்கான குறைந்த பட்ச மதிப்பெண் கருத்தியல் 75 மதிப்பெண்களில் 20 மதிப்பெண்களும், செய்முறை தேர்வில் 25 மதிப்பெண்களில் 15 மதிப்பெண்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளி மாணவர்கள் விருப்பப்படி செய்முறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கோரி சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் கடிதம் சமர்ப்பித்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.விலக்கு கோரும் தேர்வர்களின் கோரிக்கைக் கடிதங்களை பெற்று மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை