உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சுட்டிநெல்லிபட்டி நீர்வீழ்ச்சி குளிக்க குவிந்த பொதுமக்கள்

 சுட்டிநெல்லிபட்டி நீர்வீழ்ச்சி குளிக்க குவிந்த பொதுமக்கள்

காரைக்குடி: காரைக்குடி அருகே சுட்டிநெல்லிப்பட்டி சாய கண்மாயில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்வதால், விடுமுறையை நீர்வீழ்ச்சியில் கொண்டாட மக்கள் குவிந்தனர். இந்த கண்மாய்க்கு பள்ளத்தூர், பாலையூர் கண்மாய் நிரம்பி வழிந்து வரும் நீர் கால்வாய் வழியாக வந்து சேர்கிறது. இங்கிருந்து மறுகால் பாய்ந்து மித்ராவயல் கண்மாய் நோக்கி செல்கிறது. மறுகால் பாயும் கண்மாய் படிக்கட்டுகளில் இருந்து வெள்ளி நீர்வீழ்ச்சி போல் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று விடுமுறையாக இருந்ததா, ஏராளமான பெண்கள், மாணவர்கள் குளிக்க குவிந்தனர். இதையடுத்து அப்பகுதியில் திடீர் பஜ்ஜி, பானி பூரி கடைகளும் தோன்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி