மேலும் செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக கனமழை
11-Jul-2025
சிவகங்கை : சிவகங்கையில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது. மாலை 5:00 மணிக்கு துவங்கிய மழை தொடர்ந்து இரவு 7:00 மணி வரை நீடித்தது. நகரில் பஸ் ஸ்டாண்ட், அரண்மனை வாசல், சிவன்கோவில்,போஸ் ரோடு, காந்தி வீதி உள்ளிட்ட பகுதியில் ரோட்டில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. கால்வாய்களில் சாக்கடையோடு மழை நீரும் சேர்ந்து ஓடியது. பஸ் ஸ்டாண்ட் பின்புறம், போஸ் ரோடு, அரண்மனை பகுதியில் கால்வாயை முறையாக துார்வாரததால் கழிவுநீருடன் மழைநீர் சேர்ந்து ரோட்டில் ஓடியதாக வணிகர்கள் தெரிவித்தனர். *தேவகோட்டையில் இரண்டு தினங்களாக தொடர்ந்து மாலை 6:30 மணி முதல் மழை பெய்ய துவங்கி இரவு முழுவதும் இடி மின்னலுடன் பெய்து வருகிறது. பூமி குளிர்ந்த நிலையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கு ஏற்ப ஆடி மழை விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
11-Jul-2025