உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சம் வழிப்பறி

சிவகங்கையில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சம் வழிப்பறி

சிவகங்கை: சிவகங்கை அருகே பெருமாள்பட்டியில் கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த ரூ.1 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பினர். சிவகங்கை அருகே பிரவலுார் வெங்கட்ராமன் 35. டிப்பர் லாரி வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரை தொடர்பு கொண்ட நண்பர் கவாஸ்கர், நம்பர் தெரியாத கார் ஒன்று தன்னை இடித்து விட்டு சென்றதாக கூறியுள்ளார். அந்த காரை பின் தொடர வேண்டும் என வெங்கட்ராமனை அழைத்துள்ளார். மோதிய காரை பின் தொடர்ந்தனர்.கார் பெருமாள்பட்டியில் நின்றது. நம்பர் பிளேட் இல்லாத காரில் இருந்து இறங்கிய 3 பேர் கும்பல், அரிவாளால் வெங்கட்ராமனின் கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த ரூ.1 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பினர். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை