உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெண்ணிடம் ஆன்லைனில்  ரூ.6.12 லட்சம் மோசடி

பெண்ணிடம் ஆன்லைனில்  ரூ.6.12 லட்சம் மோசடி

சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹஜிரா செரின் 45. இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடியுள்ளார். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு பகுதிநேர வேலை தருவதாக ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அவர் கூறியதை நம்பிய ஹஜிரா செரின் அவர் கூறிய வங்கி எண்ணிற்கு 26 தவணைகளாக ரூபாய் 6 லட்சத்து 12 ஆயிரத்து 510 அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் பகுதி நேர வேலை தராமல் தன்னை ஏமாற்றியதாகவும், இழந்த பணத்தை மீட்டு தருமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை