உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குப்பை கிடங்கிற்குள் பலியாகும் மாடுகள்

குப்பை கிடங்கிற்குள் பலியாகும் மாடுகள்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் குப்பை கிடங்கிற்குள் சென்று பாலிதீன் குப்பைகளை தின்னும் கோயில் மாடுகள் இறப்பது தொடர்கிறது.இப்பேரூராட்சியில் மேலுார் ரோட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. நகரில் 28 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் அனைத்து வகையான குப்பைகளும் இங்கு குவிக்கப்பட்டு கையாளப்படுகிறது.குப்பை கிடங்கு முறையாக பூட்டி வைக்காமல்திறந்து கிடப்பதால் கோயில் மாடுகள் உள்ளே சென்று பாலிதீன் குப்பைகளை தின்கின்றன. மாடுகளின் வயிற்றில் அவை தேங்கி பல மாடுகள் இறக்கும் நிலை தொடர்கிறது. எனவே கோயில் மாடுகள் உள்ளே செல்லாமல் குப்பை கிடங்கின் கதவுகளை பூட்டி வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை