உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சாய்பாபா பிறந்த நாள் விழா

 சாய்பாபா பிறந்த நாள் விழா

காரைக்குடி: காரைக்குடி சுப்பிரமணியபுரம் சத்ய ஸாயி சேவா சமிதியில், சத்ய சாய் பாபாவின் 100 வது பிறந்த நாள் விழா தொடங்கியது. நேற்று தில்லை ஆச்சி வீணை கச்சேரி நடந்தது. தொடர்ந்து மகிளா பஜன் மற்றும் மங்கள ஆரத்தி நடந்தது. இன்று மாலை 6:15 மணிக்கு சாய் பஜன் மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மருத்துவ முகாம், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவ. 22 மாலை 5:30 மணிக்கு ஸ்ரீ சத்ய சாயி பாபா என்ற தலைப்பில் சரஸ்வதி ராமநாதன் உரை நிகழ்த்துகிறார். 6:30 மணிக்கு லட்சார்ச்சனை, இரவு 8:00 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெறுகிறது. நவ. 23 அன்று கணபதி ஹோமம், நகர சங்கீர்த்தனம், பிரசாந்தி கொடியேற்றம், சாய் பஜன், ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு தெற்கு சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ