உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை துத்திகுளம் விவசாய நிலங்களில் மணல் திருட்டு

மானாமதுரை துத்திகுளம் விவசாய நிலங்களில் மணல் திருட்டு

மானாமதுரை : மானாமதுரை துத்திகுளம் அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தி தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்மானாமதுரை வழியாக செல்லும் வைகை ஆற்றின் ஓரங்களில் துத்திகுளம், ராஜகம்பீரம், கால்பிரவு , கல்குறிச்சி பகுதிகளுக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலங்களில் விவசாய நிலங்கள் வழியாக சென்று இரவில் மர்மகும்பல் மணலை திருடி வருகின்றனர். பகலில் மண் உள்ள இடத்தை நோட்டமிட்டு இரவில் மண் அள்ளும் இயந்திரங்கள், லாரிகளுடன் விவசாய நிலங்கள் வழியாக சென்று மணல் அள்ளி விட்டு அந்த பள்ளத்தை மற்ற மண், கல், மரம் உள்ளிட்டவைகளை வைத்து மூடிவிட்டு சென்று விடுகின்றனர்.தகவலறிந்து நில உரிமையாளர்கள் வருவதற்குள் மண் திருடும் கும்பல் தலைமறைவாகி வருகின்றனர்.இது இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: துத்திகுளத்தில் விவசாயிகள் நிலத்தைச் சுற்றிலும் வேலி அமைத்துள்ளாலும் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த சில நாட்களாக இரவில் மர்ம கும்பல் நுழைந்து மணல் திருடி வருகின்றனர்.பாதை வசதி இல்லாததால் விவசாய நிலங்கள் வழியாக சென்று வேலியையும் சேதப்படுத்தி மணலை திருடியுள்ளனர். வருவாய், போலீசிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஆற்றை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை