உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

தேவகோட்டை: சருகணி இதயா மகளிர் கல்லுாரியில் இயற்பியல், உயிர் வேதியியல், வேதியியல் துறை இணைந்து இயற்பியல் உயிர் வேதியியல் அறிவியலில் சமீபத்திய ஆராய்ச்சி போக்குகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.செயலாளர் பாத்திமா பவுலா தலைமை வகித்தார். முதல்வர் மரிய ஜோசபின் முன்னிலை வகித்தார். உயிர் வேதியியல் துறை தலைவி உஷாராணி வரவேற்றார். குமரேசன் ராமநாதன் நுண்ணுயிரிகளின் மருத்துவ முக்கியத்துவம் என்ற தலைப்பிலும், பசியாபழம் ராமசாமி சூரிய மின்கலனின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும், யுவலோசினி ஆராய்ச்சி முக்கியத்துவம் என்ற தலைப்பில், பெனடோ மசபெலா சூரிய விண்கல பயன்பாடு பற்றியும், சுகந்தி, தவசுராஜ் நானோ தொழில்நுட்பம் பற்றியும் பேசினர். இயற்பியல் துறை தலைவி சங்கவி, பேராசிரியர் கலைச்செல்வி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை