உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  நிதி மற்றும் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு சிவகங்கை நுகர்வோர் நீதிமன்றம்

 நிதி மற்றும் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு சிவகங்கை நுகர்வோர் நீதிமன்றம்

சிவகங்கை: சிவகங்கையில் தனியார் நிதி நிறுவனத்திற்கும், இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சிவகங்கை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்த பூ வியாபாரி வெங்கடேசன். கடந்த 2024ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து மேலுார் ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் பெற்றிருந்தார். இக்கடனை மாதம் ரூ.16,751 வீதம் செலுத்துவதாக கூறி, 2024 ஜூன் முதல் டிச., வரை தவணை தொகையை செலுத்தி வந்தார். கடன் வாங்கும் போது இந்த கடனுக்காக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.68,142 பிரீமிய தொகை செலுத்தியுள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் இறந்துவிட்டார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் வெங்கடேசன் செலுத்த வேண்டிய பாக்கி கடன் தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து நிதி நிறுவனத்தினர் வெங்கடேசனின் வீட்டை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்தனர். வெங்கடேசனின் தாய் மற்றும் சகோதரி சிவகங்கை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி பாலசுப்பிரமணியன், உறுப்பினர் குட்வின்சாலமோன்ராஜ் விசாரித்தனர். வெங்கடேசன் லோன் வாங்கும்போது வங்கி கடனுக்கு இன்சூரன்ஸ் செய்திருப்பதால் இன்சூரன்ஸ் நிறுவனம் அவர் செலுத்த வேண்டிய தொகையை நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் வீட்டு அசல் ஆவணங்களை விரைவில் ஒப்படைக்க வேண்டும். இழப்பீடாக நிதி நிறுவனம், இன்சூரன்ஸ் நிறுவனம் தலா ரூ. ஒரு லட்சமும், வழக்கு செலவு தொகை ரூ.10 ஆயிரத்தை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி