உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்ட நூலகங்களில் "கம்ப்யூட்டர் முடக்கம் : இரண்டு ஆண்டுகளாக வாசகர்கள் "அவதி

மாவட்ட நூலகங்களில் "கம்ப்யூட்டர் முடக்கம் : இரண்டு ஆண்டுகளாக வாசகர்கள் "அவதி

காரைக்குடி : முறையான பணியாளர்கள் இன்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்டத்தில் பெரும்பாலான நூலகங்களில் 'கம்ப்யூட்டர்', 'ஜெராக்ஸ் மிஷின்' பயன்பாடின்றி முடங்கியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் 42 கிளை நூலகங்கள், 48 ஊர் புற நூலகங்கள், 20 பகுதி நேர நூலகங்கள் என, மொத்தம் 110 நூலகங்கள் செயல்படுகின்றன. நூலகங்களில் உள்ள புத்தகங்கள், உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள், அவர்களின் பெயர்கள் மற்றும் பதிவேடுகளை பராமரிப்பதற்காகவும் தாலுகா அளவில் செயல்படும் நூலங்களுக்கு கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. அதன்படி, திருப்புத்தூர் 2, காரைக்குடி 2, இளையான்குடி 2, மானாமதுரை 2, சிவகங்கையில் உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு 8 என, மொத்தம் 16 'கம்ப்யூட்டர்கள்' நூலகத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு வழங்கியது. இதில், மாவட்ட நூலகத்தில் மட்டுமே 'கம்ப்யூட்டர்' பயன்பாட்டில் உள்ளது. மற்ற நூலகங்களில் பயன்பாடின்றி துணியால் மூடப்பட்டு முடங்கியுள்ளன.வாசகர்கள் கூறுகையில், '' நூலகத்தில் புத்தகங்களின் இருப்பு, வாசகர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பதிவு செய்வதற்காக 'கம்ப்யூட்டர்' வழங்கப்பட்டது. இதை இயக்குவதற்கு முறையான பணியாளர்கள் மற்றும் 'சாப்ட்வேர்' பொருத்தப்படாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித பயன்பாடும் இன்றி 'தூசி' படிந்துள்ளது. இதற்கிடையில், தற்போது வழங்கப்பட்ட 'ஜெராக்ஸ் மிஷின்' நகல் எடுப்பதற்கு தேவையான 'பேப்பர்' வழங்கப்படாததால் 'கிடப்பில்' போடப்பட்டுள்ளது. ஆய்வு படிப்பு மேற்கொள்ளும், மாணவர்கள் அரிய புத்தகங்களின் நகல் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், புத்தகங்களை வெளியே எடுத்து சென்று நகல் எடுப்பதற்கும் நூலகர்கள் அனுமதிப்பதில்லை. இதனால், வாசகர்களும், மாணவர்களும் பெரிதும் அவதிப்படுகிறோம்''என்றனர். தீர்வு என்ன: எந்த நோக்கத்திற்காக, நூலகத்திற்கு கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மிஷின் வழங்கப்பட்டதோ, அது நிறைவேறாமல் முடங்கியுள்ளது. எனவே, கம்ப்யூட்டரை இயக்க முறையான பணியாளர்கள் நியமிப்பதோடு, நகல் எடுப்பதற்கு தேவையான 'பேப்பரையும்' வழங்க மாவட்ட மைய நூலகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை