உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடியில் துப்பாக்கி சூடு பிளஸ் 2 மாணவர் காயம்

இளையான்குடியில் துப்பாக்கி சூடு பிளஸ் 2 மாணவர் காயம்

இளையான்குடி : பரமக்குடியில் நடந்த கலவரத்தை தொடர்ந்து, இளையான்குடியில் மறியலில் ஈடுபட்டவர்களை, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியபோது, மாணவர் கையில் குண்டு பாய்ந்து காயமுற்றார். பரமக்குடி கலவரத்தின் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியிலும், சிலர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இளங்கோ டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் அவர்களை கலைந்து போகும்படி கூறினர். அப்போது, மறியலில் ஈடுபட்டவர்களில் சிலர் கற்களை வீசி தாக்கினர். இதில் ஆத்திரமுற்ற டி.எஸ்.பி., கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், கடைக்கு சென்ற காரைக்குடியை சேர்ந்த ராமசந்திரன் மகன் பிளஸ் 2 மாணவர் ஆனந்த்,16, கையில் குண்டு பாய்ந்தது. அவரை இளையான்குடி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடையடைப்பு: இச்சம்பவத்தை தொடர்ந்து இளையான்குடி, மானாமதுரை, திருப்புத்தூரில் பாதுகாப்பு கருதி கடையடைப்பு நடந்தது. பஸ் போக்குவரத்தும் ஆங்காங்கே சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. போலீசார் அனுமதிக்கு பின்னரே பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை