உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுகாதாரமான நகராக மாற்றுவேன் : தி.மு.க.,வேட்பாளர் வாக்குறுதி

சுகாதாரமான நகராக மாற்றுவேன் : தி.மு.க.,வேட்பாளர் வாக்குறுதி

திருப்புத்தூர் : திருப்புத்தூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றி கொசு தொல்லையில்லாத சுகாதாரமான நகராக மாற்றுவேன் என்று பேரூராட்சித் தலைவருக்கான தி.மு.க., வேட்பாளர் நாராயணன் தெரிவித்துள்ளார். மனு தாக்கல் செய்த அவர் கூறியதாவது: தி.மு.க.,ஆட்சியில் தான் நகருக்கு காவிரி குடிநீர் வந்தது.தொடர்ந்து பரவலாக உள்ள திறந்தவெளிப்பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால்களை அகற்ற பாதாளசாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். கொசுத்தொல்லை இல்லாத சுகாதாரமான நகராக திருப்புத்தூர் உயர்த்தப்படும். தெருச்சாலைகள் மேம்படுத்தவும், விஸ்தரிப்பு பகுதிகளில் அடிப்படைவசதிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.பேரூராட்சியில் வாரந்தோறும் அடிப்படை பிரச்னை குறித்து மக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்தப்படும்.' என்றார். பேரூராட்சிதலைவர் சாக்ளா, நகர் செயலாளர் கார்த்திகேயன், வக்கீல் திருநாவுக்கரசு, முன்னாள் துணைத் தலைவர் சிவக்குமார்,மாவட்டப் பிரதிநிதி ஷாஜஹான், பிளாசா சேகர்,தொழிற்சங்கம் முத்தலீபு உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Moorthy
செப் 26, 2025 19:06

இடி, மின்னல், கடும் மழையிலும் நாட்டியாஞ்சலி என்பது அவர்களின் அர்ப்பணிப்பு ...ஆனால் இடி மின்னலால் வெட்டவெளியில் பல அசம்பாவிதங்கள் நடந்துள்ளன என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை