சிவகங்கை:''தொழில் சார்ந்த படிப்பு முடித்தவர்கள் இனி சிவகங்கை
வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே பதியலாம்,'' என, சிவகங்கை வேலைவாய்ப்பு
அலுவலர் மனோகரன் தெரிவித்தார்.அவர் கூறுகையில்,''முதுநிலை பட்டம், பி.இ.,
பி.டெக்., எம்.பி.பி.எஸ்., சி.ஏ., பி.எல்., போன்ற தொழில் படிப்பு
முடித்தோர், வேலைவாய்ப்பு பதிவிற்காக சென்னை அல்லது மதுரை தொழில்
வேலைவாய்ப்பு அலுவலகம் செல்ல தேவையில்லை. இதை சிவகங்கை வேலைவாய்ப்பு
அலுவலகத்திலேயே செய்துகொள்ளலாம்.பதிவு செய்வோர், ரேஷன் கார்டு, கல்வி,
ஜாதி, உயர்கல்வியில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றுகளுடன் வரவும்.
பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை வழங்கப்படும். தங்கள்
வீடு அல்லது பிரவுசிங் சென்டர்களில் இருந்தும்,
''-http://tnvelaivaaip-pu.gov.in-/Empower''' என்ற
முகவரியில் பதிவு செய்யலாம். புதிதாக பதிவு செய்வோர், நியூ யூசர் ஐடி.,யை
கிளிக் செய்தால், ஸ்கிரீனில் தேவையான விபரம் இருக்கும் அவற்றை 'சேவ்'
செய்தால், 'யூசர் ஐடி' உருவாகும்.அதன்பின் தொடர்ச்சியாக பதிவு விபரங்களை
செலுத்தி, அடையாள அட்டை பெறலாம். பழைய பதிவுதாரர்கள் 'யூசர்ஐடி'- யில்
பதிவு எண், பிறந்த தேதியை 'பாஸ்வேர்டாக' கொடுத்து, புதுப்பித்தல், கூடுதல்
பதிவு, முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம், '' என்றார்.