| ADDED : மார் 01, 2024 12:13 AM
சிவகங்கை : பிரதமர் சோலார் மின் திட்டம் மூலம் வீடுகளில் சோலார் பேனல் பொருத்துவோருக்கு ரூ.78 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும் என சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் எஸ்.குருசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் 'சோலார் மின் திட்டத்தை' செயல்படுத்தும் விதமாக மானியத்துடன் சோலார் பேனல் அமைக்க கடனுதவி வழங்கப்படுகிறது.ஒரு கிலோவாட்- மின் தேவைக்கான பேனல் பொருத்த ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட்டிற்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட்டிற்கு மேல் ரூ.78 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படும்.இத்திட்டத்திற்காக வங்கிகள் மூலம் உடனுக்குடன் கடன் வழங்கப்படும். வீட்டில் சோலார் பேனல் பொருத்திய நாளில் இருந்து 7 முதல் 30 நாட்களுக்குள் பயனாளர் வங்கி கணக்கில் மானிய தொகை வரவு வைக்கப்படும்.ஒரு கிலோ வாட் சோலார் பேனல் நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 யூனிட் வரை மின் உற்பத்தி செய்யும். மின்பயனீட்டாளர் தங்கள் முதலீட்டு தொகையை குறைந்த காலத்திற்குள் திரும்ப பெறலாம்.இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்களை, registration pmsuryaghar.gov.in'' மற்றும் www.pmsuryaghar.gov.in'', www.solarrooftop.gov.in'' ஆகிய இணையதளம் மூலமும், ''PM-suryaghar'' மற்றும் QRT pmsurya Ghar'' ஆகிய ஆப் மூலமும் பதிவு செய்யலாம். சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி, பசுமையான, ஒளிமையமான எதிர்காலத்தை உருவாக்குவோம், என்றார்.