உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கதை சொல்லும் போட்டி 

 கதை சொல்லும் போட்டி 

சிவகங்கை: சிவகங்கையில் தமிழ் சங்கம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கதை சொல்லும் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். நல்லாசிரியர் பகீரத நாச்சியப்பன், தமிழ் சங்க நிறுவன தலைவர் ஜவகர் கிருஷ்ணன், முன்னாள் தலைவர் அன்புத்துரை, ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் பாண்டியராஜன் வரவேற்றார். சிவகங்கை நகரில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கதை சொல்லும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை 21 ம் நுாற்றாண்டு மேல்நிலை பள்ளி முதன்மை முதல்வர் விவேகானந்தன், எழுத்தாளர் ஞானபண்டிதன், சிவகங்கை நம்பிக்கை மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் சரளா கணேசன் பாராட்டு சான்றுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி