உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  நிற்காத மகளிர் விடியல் பஸ் வேதனையில் மாணவிகள்

 நிற்காத மகளிர் விடியல் பஸ் வேதனையில் மாணவிகள்

காரைக்குடி: காரைக்குடியில் மாணவிகளை ஏற்றிச் செல்லாத மகளிர் விடியல் பஸ்சை, வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர். காரைக்குடிக்கு தினமும் காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவிகள் வந்து செல்கின்றனர். காலை நேரத்தில் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, போதிய பஸ் இல்லாததால் மாணவர்கள் படியில் தொங்கிச் செல்வது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் மாலை நேரங்களில், கல்லூரி சாலையில் வரக்கூடிய மகளிர் விடியல் பஸ் மாணவிகளை ஏற்றிச் செல்லாமல் செல்கிறது. இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், நிற்காமல் செல்லும் மகளிர் விடியல் பஸ்சை வீடியோ எடுத்து, மாணவிகள் சமூக வலைதளத்தில் பரப்பி வேதனையை பகிர்ந்து வருகின்றனர். மாலை 4:30 மணிக்கு வரக்கூடிய பஸ்சை பிடிப்பதற்கு வேக வேகமாக ஓடி வந்து பஸ்சுக்காக காத்திருந்தால், கூட்டமே இல்லாத பஸ் எங்களை ஏற்றாமல் செல்கிறது என்று வீடியோ மூலம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி